Nov 29, 2018 01:00 AM

புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை ரம்யா! - ரசிகர்கள் அதிர்ச்சி

புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை ரம்யா! - ரசிகர்கள் அதிர்ச்சி

‘குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ரம்யா, தொடர்ந்து ‘கிரி’, ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர், கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதோடு, அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார்.

 

ரம்யாவின் அரசியல் வளர்ச்சிக்கு பிரிதும் உதவியர், சமீபத்தில் மறைந்த கன்னட நடிகரும், அரசியல்வாதியுமாம் அம்ரீஷ். ஆனால், அவரது மறைவுக்கு ரம்யா வராததால், அம்ரீஷின் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்ததோடு, பல இடங்களில் ரம்யாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். இது கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்ரீஷின் மறைவுக்கு தான் வராதது குறித்து ரம்யா விளக்கம் அளிக்க, அவரது விளக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ரம்யா அளித்த விளக்கத்தில், “கடந்த அக்டோபர் மாதம் முதல் ஆஸ்டியோபிளாஸ்டோமா என்ற விநோத நோயினால் நான் அவதிப்பட்டு வருகிறேன். பாத எலும்புகளில் கடுமையான வலி உள்ளது. அதை அலட்சியம் படுத்தி நடந்து சென்றால் புற்று நோயாகவும் மாற வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

 

தற்போது தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருவதால் தான், அம்ரீஷ் மறைவுக்கு என்னால் வர முடியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.