Sep 10, 2018 04:09 PM

தனது குழந்தை பற்றி பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரேவதி!

தனது குழந்தை பற்றி பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரேவதி!

தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடம் பிடித்திருக்கும் சில ஹீரோயின்களில் ரேவதி முக்கியமானவர். நடிப்பு மட்டும் இன்றி இயக்கம், தயாரிப்பு, தொலைக்காட்சி, சமூக சேவை, அரசியல் என்று பல துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

 

இப்படி பல துறைகளில், பல வெற்றிகளை கடந்து வந்த ரேவதி, இல்லற வாழ்வில் பல இறக்கங்களை சந்தித்தித்தவர், தனது கணவரை விவாகரத்து செய்த பிறகு தனது கவனம் முழுவதையும் சினிமா பக்கம் செலுத்தி வந்தாலும், அவருக்கென்று ஒரு உலகமாக அவரது மகள் இருக்கிறார். என்ன, ரேவதிக்கு மகளா? என்பது பலரிடம் எழும் கேள்வி தான். காரணம், இதுவரை அவரது குழந்தை குறித்து பலருக்கு தெரியாமல் இருக்கிறது. அப்படி அவரது குழந்தை பற்றி சிலருக்கு தெரிந்திருந்தாலும், அது தொடர்பாக பல வதந்திகளும் உலா வருகின்றன.

 

இந்த நிலையில், பிரபல வார இதழ் ஒன்றில் இணையத்திற்கு ரேவதி அளித்திருக்கும் பேட்டியில், முதல் முறையாக தனது குழந்தை பற்றிய உண்மையை சொல்லியிருக்கிறார்.

 

இது தொடர்பாக கூறிய ரேவதி, ”தாய்மை ஒவ்வொரு பெண்ணுக்குமான அர்த்தம். அதற்காக நான் ஏங்கின, கலங்கின தருணங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. கணவருடன் விவாகரத்துப் பெற்ற பிறகு, ட் ஹாய்மை குறித்து ரொம்பவே யோசிச்சு முடிவு எடுத்தேன். டெஸ்ட்டியூப் முறையில் கர்ப்பம் ஆனேன். என் மகள் மஹியை பெற்றெடுத்தேன். இப்போ அவளுக்கு 2 வயதாகிறது. ஒரு அம்மாவாக அவளை வளர்த்து ஆளாக்குவதுதான் என் சிறந்த பொறுப்பு, அதை நிறைவுடன் செய்துக்கொண்டிருக்கிறேன்.

 

Actress Revathi and Baby Mahi

 

நான் பெற்றெடுத்த மஹி, தத்தெடுத்த குழந்தை என்று வதந்திகள் உலா வருகின்றது. அது பற்றி எனக்கு கவலையில்லை. என் குழந்தையைப் பற்றி பெருசா இதுவரை சொன்னதில்லை. இப்போ தான் முதல் முறையாக உண்மையை சொல்கிறேன். மஹி தான் உலகம், அவள்தான் என் வாழ்நாள் அடையாளம்.” என்று தெரிவித்துள்ளார்.