திருமண வாழ்க்கையை விரும்பும் சாய் பல்லவி! - காதல் குறித்து மனம் திறந்தார்

‘பிரேமம்’ படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான சாய் பல்லவி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ‘மாரி 2’ படத்தை தொடர்ந்து சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படத்திலும், பகத் பாசிலுடன் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல், திருமணம், லிவிங் டூ கேதர் குறித்து மனம் திறந்து சாய் பல்லவி பேசியுள்ளார்.
அந்த பேட்டியில், “நான் காதலிக்கிறேனா, இல்லையா? லிவிங் டூ கெதர் உறவில் வாழ்வீர்களா? என்று கேட்கிறார்கள். எனது கல்லூரி நாட்களில் புத்தகங்களை காதலித்தேன். தற்போது சினிமாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
என்னுடைய என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை லிவிங் டூ கெதர் உறவு எனக்கு தேவையில்லை. அதற்காக, அதற்கு எதிராக இருக்கிறேன் என்பதல்ல. இது எல்லாமே அவரவர்களின் செயல்பாடுகளை பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எனக்கு அத்தகைய உறவு தேவையில்லை. நான் திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.