Dec 10, 2018 02:49 AM

நடிகை சாந்தினிக்கு திடீர் திருமணம்! - நடிகரை மணக்கிறார்

நடிகை சாந்தினிக்கு திடீர் திருமணம்! - நடிகரை மணக்கிறார்

பாக்யராஜ் இயக்கத்தில் அவரது மகன் சாந்தனு ஹீரோவாக நடித்த ‘சித்து பிளஸ் 2’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி. தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், சில படங்களில் இரண்டாம் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கினார்.

 

இதற்கிடையே ‘ராஜா ரங்கூஸ்கி’ படத்தில் வில்லியாக நடித்தவர், ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் கவர்ச்சி வேடத்திலும் நடித்தார். தற்போது ‘வணங்காமுடி’, ‘அச்சமில்லை அச்சமில்லை’, ‘டாலர் தேசம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் நிலையில், சாந்தினிக்கு திடீர் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

சாந்தினியும், நடன இயக்குநரும் நடிகருமான நந்தா என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தற்போது அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைகொடி காட்டி விட்டனர். இதை தொடர்ந்து இரு வீட்டாரும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துவிட்டனர்.

 

Nandha

 

வருகிற டிசம்பர் 12 ஆம் தேதி சாந்தினி - நந்தா திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதில், பங்கேற்க நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.