‘பேட்ட’ படத்தில் ரஜினி லுக்கை நக்கலடித்த நடிகை - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் இரண்டாவது லுக் இன்று மாலை திடீரென்று வெளியிடப்பட்டு ரஜினி ரசிகர்களுக்கு பெரும் சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர்களது கொண்டாட்டத்திற்கு இடையூறு செய்வதுபோல நடிகை கஸ்தூரி நக்கலடித்திருக்கிறார்.
பேட்ட இரண்டாவது லுக்கில் ரஜினிகாந்த் வேஷ்டி, சட்டையுடன், பெரிய முறுக்கு மீசையும் வைத்திருக்கிறார்.
இதில் அரசியலில் இருக்கும் கே.சி.பழனிசாமி என்பவரது லுக் போலவே இருபதாக ஒப்பீடு செய்து சிலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதை ரீட்வீட் செய்துள்ள நடிகை கஸ்தூரி "அட பாவிங்களா!" என குறிப்பிட்டுள்ளார்.
அதை பார்த்து கடுப்பான ரஜினி ரசிகர்கள் அந்த ட்விட்டுக்கு அவரை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் அது தன்னுடைய ட்விட் என பதில் அளித்துள்ள கஸ்தூரி, "பழனிச்சாமி போல இருப்பது தவறான விஷயமா என்ன?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
பல விஷயங்களுக்கு கருத்து தெரிவித்து வாங்கிக்கட்டிக் கொல்வது கஸ்துரிக்கு பழகிபோன ஒன்று தான் என்பது குறிப்பிடத்தக்கது.