Sep 29, 2018 08:11 AM

விஜய் படத்தை பார்த்து பயத்தில் உரைந்த நடிகை!

விஜய் படத்தை பார்த்து பயத்தில் உரைந்த நடிகை!

தமிழ் சினிமாவின் தற்போதைய சூப்பர் ஸ்டாராக உள்ள விஜயின் படங்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துவதோடு, மிகப்பெரிய வெற்றியும் பெற்று வருகிறது.

 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ’சர்கார்’ படமும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற இருக்கும் படத்தின் இசை வெளீயீட்டு நிகழ்வும் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், பிரபல நடிகை ஒருவர் விஜய் குறித்து கூறும்போது, அவரது படத்தை பார்த்து பயத்தில் உரைந்ததாக தெரிவித்திருக்கிறார்.

 

’தலைவா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் அமலா பால். மலையாள நடிகையான இவர் விஜயின் தீவிர ரசிகையாம். 10-ம் வகுப்பு படிக்கும் போது, பள்ளிக்கு செல்லாமல் போக்குரி படம் பார்க்க தனது தோழியுடன் சென்றாராம். படத்தில் இடம்பெற்ற “டோலு டோலு..” பாடம் வரும் போது, தியேட்டரில் இருந்தவர்கள் நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட, தியேட்டரில் தானும், தனது தோழியும் என இரண்டு பெண்கள் மட்டுமே இருக்க, அமலா பால் சற்று பயத்தில் உரைந்துவிட்டாராம்.

 

Amala Paul

 

அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராட்ச்சசன்’ விரைவில் வெளியாக உள்ள நிலையில், அவர் நடித்து வரும் ‘ஆடை’ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.