3D யில் செக்ஸ் காமெடி படம்! - யோகி பாபு நடிக்கிறார்

‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய செக்ஸ் காமெடி படங்கள் வெளியாகி வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றதால் இதுபோன்ற படங்களை எடுத்து துட்டு சம்பாதிக்க பலர் முடிவு செய்துள்ளனர். இப்படங்களுக்கு ஊடகங்களும் சமூக ஆர்வலர்களும், ஏன் பல சினிமா பிரபலங்கள் கூட எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், படம் நல்ல லாபம் பார்த்ததால், பிற எதிர்ப்புகளை பார்க்காத மற்றொரு குழுவும் தற்போது இதுபோன்ற ஒரு செக்ஸ் காமெடி படத்தை எடுக்க தயாராகிவிட்டது.
அதிலும், தமிழ் சினிமாவில் முதல் முறையாக இந்த செக்ஸ் காமெடி படத்தை 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கவும் இந்த படக்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது இப்படத்தில் நடிக்க இருக்கும் முக்கிய நடிகர் தேர்வில் ஈடுபட்டிருக்கும் படக்குழு, தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபுவையும், இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்கிய யாஷிகா ஆனந்த், நிக்கி தம்போலி ஆகியோரை ஒப்பந்தம் செய்திருக்கிறது.
2.0 போன்ற பெரிய படங்களில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உள்ள இந்த 3டி செக்ஸ் படத்தை விநாயக் சிவா என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.