நயந்தாராவை தொடர்ந்து அமலா பாலுடன் நடிக்கும் பிஜிலி ரமேஷ்!

சமூக வலைதளம் மூலம் பிரபலமாகிரவர்களுக்கு உடனடியாக சினிமா வாய்ப்பும் கிடைத்துவிடுகிறது. அந்த வரிசையில், சமூக வலைதளம் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ், என்பவருக்கு தற்போது ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்து அவரும் பிஸியான நடிகராகிவிட்டார்.
மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நயந்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் புரமோஷான் பாடலில் நடித்திருந்த பிஜிலி ரமேஷ், தற்போது பல படங்களில் நடித்து வரும் நிலையில், அமலா பால் நடிக்கும் ‘ஆடை’ படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறாராம்.
‘மேயாதா மான்’ படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஆடை’ பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், பிஜிலி ரமேஷை மிக முக்கியமான வேடத்திற்காக ஒப்பந்தம் செய்திருக்கும் ஆடை படக்குழு அவரை வைத்து கடந்த 10 நாட்களாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார்களாம். தற்போது சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கவும் இயக்குநர் முடிவு செய்திருக்கிறாராம்.