Nov 29, 2018 01:14 AM

மீண்டும் மல்டி ஸ்டார்ஸ் கதை! - விஜய்க்கு வலை விரிக்கும் மணிரத்னம்

மீண்டும் மல்டி ஸ்டார்ஸ் கதை! - விஜய்க்கு வலை விரிக்கும் மணிரத்னம்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்தின் படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், அவரது சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வந்ததால், மணிரத்னத்திடம் சரக்கு தீர்ந்துவிட்டதாக விமர்சிக்கப்பட்டது.

 

இதற்கிடையே, சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை ஒன்றாக வைத்து ‘செக்கச் சிவந்த வானம்’ என்ற தாதா படத்தை மணிரத்னம் இயக்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படம், பெரிய அளவில் இல்லை என்றாலும், விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட நடிகர்களால் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றியும் பெற்றது.

 

இந்த நிலையில், மாஸ் ஹீரோக்கள் இருந்தால் சுமாரான படம் கூட சூப்பர் ஹிட் ஆகிவிடும், என்பதை புரிந்துக் கொண்ட மணிரத்னம், மீண்டும் முன்னணி ஹீரோக்கள் சிலரை ஒன்றாக வைத்து படம் இயக்க முடிவு செய்திருக்கிறாராம்.

 

அதற்காக அவர், விஜய், சிம்பு மற்றும் விக்ரம் ஆகியோருக்கு வலை விரித்திருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோர் ஏற்கனவே மணிரத்னம் படத்தில் நடித்திருந்தாலும், விஜய் மட்டும் இன்னும் மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க ஆர்வம் தான் என்றாலும், மல்டி ஸ்டார்ஸ் கதை என்பதால் இதில் நடிக்க சம்மபதிப்பாரா என்பது சந்தேகமே, என்றும் கூறப்படுகிறது.