Nov 26, 2018 06:49 AM

ரஜினியின் சாதனையை ஒரே இரவில் முறியடித்த அஜித்!

ரஜினியின் சாதனையை ஒரே இரவில் முறியடித்த அஜித்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பொங்கலுக்கு தள்ளி போயுள்ளது. இதற்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, விஸ்வாசம் படத்தின் பஸ்ட் லுக் வெளியான பிறகு அஜித் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாக இருந்தார்கள். காரணம், அந்த அளவுக்கு படு மொக்கையான போஸ்டர் ஒன்றை பஸ்ட் லுக் என்று தயாரிப்பு தரப்பு வெளியிட்டதால் தான். அதுமட்டும் இன்றி படம் குறித்த எந்தவித அப்டெட்டும் இல்லாததால், சில அஜித் ரசிகர்கள் இயக்குநர் சிவா மற்றும் தயாரிப்பு தரப்பை கடுமையாக விமர்சனமும் செய்தார்கள்.

 

இந்த நிலையில், அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு தரப்பு நேற்று வெளியிட்டது. இந்த போஸ்டரால் குஷியடைந்த அஜித் ரசிகர்கள், அதனை இன்று வரை டிரெண்டிங்கில் இருக்கும்படி செய்து வருகிறார்கள்.

 

அதுமட்டும் அல்ல, சமீபத்தில் வெளியான ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மோஷன் போஸ்டரை விட அதிக லைக்குகளை ‘விஸ்வாசம்’ பட மோஷன் போஸ்டர் பெற்றிருக்கிறதாம். அதுவும் ஒரே இரவில்.

 

ஆக, மொத்தத்தில் ரஜினிகாந்தின் சாதனையை அஜித் ஒரே இரவில் முறியடித்துவிட்டார், என்ற கூடுதல் குஷியில் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்.