அஜித்தின் திடீர் ஜெர்மனி பயணம்! - எதற்கு தெரியுமா?

‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து முடித்துவிட்ட அஜித், அடுத்தது எந்த இயக்குநர் படத்தில் நடிப்பார், என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்றாலும், அவர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குநர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் அஜித் நடிக்க இருப்பதாக வெளியான தகவலை இயக்குநர் வினோத் மறுத்திருக்கிறார்.
இந்த நிலையில், கோவாவில் குடும்பத்தோடு ஓய்வு எடுத்து வந்த அஜித், திடீரென்று ஜெர்மனிக்கு சென்றிருக்கிறார். விசாரித்ததில், ஏரோ மாடலிங் சம்மந்தப்பட்ட விஷயத்திற்காக அவர் ஜெர்மனி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
நடிப்பது மட்டும் இன்றி, ஏரோ மாடலிங்கிலும் ஆர்வம் கொண்ட அஜித், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் சேர்ந்து ஏரோ மாடலிங் உருவாக்கப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.