Jan 03, 2019 05:48 AM
தனுஷை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்கும் அஜித் பட தயாரிப்பாளர்!

அஜித்தின் ‘விவேகம்’ மற்றும் விரைவில் வெளியாக உள்ள ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அடுத்ததாக தனுஷை வைத்து இரண்டு படங்கள் தயாரிக்கிறது.
இதில் ஒரு படத்தை ‘ராட்சசன்’ புகழ் ராம்குமார் இயக்குகிறார். மற்றொரு படத்தை ‘கொடி’ பட புகழ் துரை செந்தில்குமார் இயக்குகிறார். இது குறித்து அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
தற்போது, இந்த இரு படங்களுக்கான நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.