சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ‘அமலா’!

18 வது சென்னை சரவதேச திரைப்பட விழா கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளில் இருந்து பல மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்ட இந்த திரைப்பட இழாவில், இந்தியாவில் இந்தியன் பனோரமா பிரிவில் இருந்து 17 திரைப்படங்கள் தேர்வானது. அதில் ஒரு படம் தான் ‘அமலா’.
கிரைம் திரில்லர் ஜானர் திரைப்படமான ‘அமலா’ தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. நிஷாத் இப்ராஹிம் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த், ‘ஆட்டோ சங்கர்’ வெப் சீரிஸ் புகழ் அப்பாணி சரத், அனார்கலி மரிக்கர், குழந்தை நட்சத்திரங்களான வைஷ்ணவ், ஆன்மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘அமலா’ ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. படம் தொடங்கிய சில நொடிகளிலேயே ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்ததோடு, படம் முடியும் வரை அத்தனை பேரும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு படம் படு விறுவிறுப்பாக நகர்ந்ததாக பாராட்டியுள்ளார்கள். மேலும், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஸ்ரீகாந்த், அப்பணி சரத், அனார்கலி மரிக்கர் ஆகியோரின் நடிப்பு தங்களை வெகுவாக கவர்ந்ததாக ரசிகர்கள் ஒவ்வொருவரும் இயக்குநரிடம் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
சர்வதேச திரைப்பட விழாவில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதால் ‘அமலா’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
அபிலாஷ் சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லிஜின் பொம்மினோ இசையமைத்துள்ளார். ராம் பிரகாஷ் வசனம் எழுத, மோகன்ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார். பயர் கார்த்திக் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சிஜி பட்டணம் கலையை நிர்மாணித்துள்ளார்.
மஸ்காட் புரொடக்ஷன்ஸ் சார்பில் முஷினா நிஷாத் இப்ராஹிம் தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.