Dec 17, 2018 05:05 AM

வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய அமலா பால்!

வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய அமலா பால்!

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அமலா பால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

‘அதே அந்த பறவை போல’, ‘ஆடை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் அமலா, பால் அவ்வபோது சில சர்ச்சைகளில் சிக்கி அதன் மூலமும் பரபரப்பாக இருக்கிறார். ஏற்கனவே, ஆடை படத்தின் பஸ்ட் லுக் வெளியான போது, அதில் அமலா பால் அணிந்திருந்த கவர்ச்சி உடை பெரும் சர்ச்சையை உருவாக்கியது. ஆனால், அது படத்திற்காக அணிந்த உடை, அது படத்தில் பார்க்கும்போது பெரிதாக இருக்காது, என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.

 

இந்த நிலையில், சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் ஒன்றை அமலா பால் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமானவர்கள் லைக் கொடுத்திருந்தாலும், பலர் அமலா பாலை விமர்சனமும் செய்திருக்கிறார்கள்.

 

ஹீரோக்கள் படங்களிப் புகைப்பிடிப்பதற்கும், புகை பிடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிடுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒரு ஹீரோயின் புகை பிடிப்பதோடு, அந்த புகைப்படத்தை சமுக வலைதள பக்கத்தில் வெளியிடலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

 

Amala Paul