Aug 31, 2018 06:10 AM

சிவாஜி பட தலைப்பு மூலம் தமிழில் அறிமுகமாகும் அமிதாப் பச்சன்!

சிவாஜி பட தலைப்பு மூலம் தமிழில் அறிமுகமாகும் அமிதாப் பச்சன்!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், முதல் முறையாக தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். அதுவும் நடிகர் சிவாஜி கணேசனின் பட தலைப்பைக் கொண்ட படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

 

ஆம், ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தின் மூலம் அமிதாப் பச்சன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கிறார்.

 

திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் ஃபைவ் எலிமெண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.

 

‘கள்வணின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கும் இப்படத்தின் தலைப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக இந்த தலைப்பை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். அப்போது எப்படி, அமிதாப்பை நடிக்க சம்மதிக்க வைத்தீர்கள், என்று எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் தமிழ்வாணனிடம் அவர் கேட்டார். அதற்கு கதை தான் அவரை நடிக்க சம்மதித்து, என்று படக்குழுவினர் பதில் அளித்தனர்.

 

படத்தின் தலைப்பு அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் தமிழ்வாணன், தயாரிப்பாளர்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

Uyarntha Manithan

 

நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா பேசும் போது, “நான் திரையுலகிற்கு வருவதற்கு முன்பாகவே அமிதாப் சார் மீது மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. பிறகு நடிக்க முயற்சித்து தோற்று போன பிறகு, இயக்குநராகி அதன் மூலம் பணம் சம்பாதித்து, அதை வைத்து நானே சொந்தமாக படம் தயாரித்து ஹீரோவாக நடித்தேன். தற்போது இந்திய சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடிப்பது என்பது எனக்கு கிடைத்த பெரும் பெருமை. 40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் அமிதாப் பச்சன், இதுவரை தமிழ்ப் படத்தில் நடித்ததே இல்லை. அவர் என்னுடன் சேர்ந்து நடித்து தமிழில் அறிமுகமாகிறார் என்பது எனக்கு கிடைத்த பாக்கியம். இதுவே நான் நடிகராக வெற்றி பெற்றதற்கு சான்று.

 

தமிழ்வாணனின் அற்புதமான கதைதான் அமிதாப் பச்சன் சாரை நடிக்க சம்மதிக்க வைத்தது. அந்த அளவுக்கு கதை சிறப்பாக இருக்கிறது. அமிதாப் பச்சன் சாரனை நாங்கள் அனுக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சார் ரொம்பவே உதவியாக இருந்தார். ஸ்பைடர் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது, என தொடர்ந்து எனக்கு அவர் பல உதவிகளை செய்து வருகிறார். அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் தமிழ்வாணன் பேசும் போது, எனது கனவு நிறைவேறியது. இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று விட முடியும். உலகெங்கும் புகழ் பெற்று, இந்திய திரை உலகின் முடி சூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணி புரிவது மிக பெரிய பாக்கியம். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில் தான் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை. என் கதை தான் அவரை நடிக்க சம்மதிக்க வைத்தது என்று பலர் சொன்னாலும், இதற்கு மிக முக்கிய காரணம் எஸ்.ஜே.சூர்யா சார் தான். அவரது முயற்சியால் தான் அமிதாப் பச்சன் சார் இந்த படத்திற்குள் வந்தார்.” என்றார்.

 

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தின், பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.