Jan 04, 2019 11:57 AM

ரூ.3500 கோடிக்கு சொந்தக்காரியாகும் நடிகை எமி ஜாக்சன்!

ரூ.3500 கோடிக்கு சொந்தக்காரியாகும் நடிகை எமி ஜாக்சன்!

‘மதராசப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த மாடலனா இவர், தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்து வந்ததோடு, தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்தார். தற்போது ஹாலிவுட் டிவி தொடரில் நடித்து வருவதால், தமிழ் சினிமாவுக்கு எமி ஜாக்சன் டாடா காட்டிவிட்டார்.

 

அவ்வபோது தனது லேட்டஸ்டான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த எமி ஜாக்சன், தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் காதில் புகை வர வைத்தார்.

 

இதற்கிடையே, எமி ஜாக்சன் தனது காதலர் ஜார்ஜ் பனயோட்டுவை திருமணம் செய்துகொள்ள போகிறார். இவரக்ளது திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடந்து முடிந்தது.

 

இந்த நிலையில், தொழிலதிபரான எமி ஜாக்சனின் வருங்கால கணவர் ஜார்ஜ் பனயோட்டின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில்,  அவரது மொத்த சொத்தின் மதிப்பு 400 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல்) என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.