Dec 26, 2018 09:01 AM

வைரலாகும் எமி ஜாக்சனின் லிப் லாக் புகைப்படம்!

வைரலாகும் எமி ஜாக்சனின் லிப் லாக் புகைப்படம்!

லண்டனை பூர்விகமாக கொண்ட நடிகை நடிகை எமி ஜாக்சன், ‘மதராசப்பட்டினம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர், சில பாலிவுட் படங்கள் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘2.0’ படத்தில் கூட எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்திருந்தார். 

 

தற்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில் நடிப்பதற்காக அமெரிக்காவில் முகாமிட்டிருக்கும் எமி ஜாக்சன், தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குளிக்கும் போது, உணவு அருந்தும் போது, தனது காதலருடன் தனிமையில் இருப்பது என்று பல வகையான புகைப்படங்களை வெளியிட்டு இந்திய ரசிகர்கள் தன்னை மறந்திராதபடி பார்த்துக்கொள்கிறார்.

 

இந்த நிலையில், இந்தியர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தனது காதலருடன் உதடோடு உதடு முத்தம் கொடுக்குக்கும் புகைப்படம் ஒன்றை எமி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Amy Jackson