Oct 16, 2017 02:47 PM

’மெர்சல்’ படத்திற்கு கிடைத்தது தடையில்லா சான்றிதழ் - ஆனால்!

’மெர்சல்’ படத்திற்கு கிடைத்தது தடையில்லா சான்றிதழ் - ஆனால்!

விஜயின் ‘மெர்சல்’ மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது போல, மிக பெரிய அளவில் பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறது. முதலுக்கே மோசம் என்ற நிலையில், படம் அறிவித்தது போல தீபாவளிக்கு வெளியாகாது, என்ற ரீதியில் விலங்குகள் நலவாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றால் தான் படத்திற்கு சென்சார் சான்றிதழே வழங்கப்படும் என்ற நிலையில் உள்ளது.

 

இதற்கிடையில், சில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டதால், என்ன ஆகப்போகிறது மெர்சல், என்று பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து நேற்று முதல்வரை சந்தித்த விஜய், கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைத்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தாக கூறினார்.

 

இந்த நிலையில், மெர்சல் படம் குறித்து இன்று விலங்குகள் நலவாரியத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்த பங்கேற்ற அதிகாரிகளுக்கு மெர்சல் திரைப்படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள், மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வங்கியுள்ளனர்.

 

அதே சமயம், சில குறிப்பிட்ட காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும், என்றும் விலங்குகள் நலம்வாரியம் அறிவுறுத்தியதால், படத்தில் சில காட்சிகள் கட் செய்யப்பட்டுள்ளதாம்.