அஞ்சலிக்கு வரும் நள்ளிரவு போன்கள்! - காரணம் இதுதானாம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த அஞ்சலி, தனது குடும்ப பிரச்சினை காரணமாக தமிழ் சினிமாவை உதறிவிட்டு ஆந்திராவில் அடைக்களம் அடைந்தார். தொடர்ந்து அங்கேயே சில படங்களில் நடித்து வந்தவர், தமிழகத்தின் பக்கமே தலைக்காட்டவில்லை.
இதையடுத்து குடும்ப பிரச்சினை முடிவுக்கு வந்ததும் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். அதே சமயம், நடிகர் ஜெய்யுடனான காதலையும் வளர்த்து வந்தவர், இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தாங்கள் காதலிப்பது உண்மை என்பதை சொல்லாமல் சொல்லினார்கள்.
இதற்கிடையே, ஜெய் - அஞ்சலி காதல் முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு ஜெயின் கடந்த பிறந்தநாளன்று அஞ்சலி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இவர்களது காதல் முறிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்று, ஜெய் அஞ்சலியை இஸ்லாம் மதத்திற்கு மாற சொன்னார், என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெய்யுடனான காதலை முறித்துக் கொண்ட அஞ்சலி, அதனால் புதிய பிரச்சினையை எதிர்க்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சினிமாவில் சற்று தலை தூக்க ஆரம்பித்த அஞ்சலி, பிஸியான நடிகையானவுடன் நள்ளிரவு நேரத்தில் அவருக்கு ஏடாகூடமான போன்கள் வருமாம். பிறகு ஜெய்யை அவர் காதலிக்க தொடங்கியவுடன் அதுபோன்ற போன் கால் வருவது நின்றிவிட்டதாம். தற்போது ஜெய்யுடன் காதல் முறிவு ஏற்பட்ட அஞ்சலிக்கு, அந்த ஏடாகூட போன் கால்கள் மீண்டும் வர தொடங்கிவிட்டதாம்.
இதனால், அஞ்சலியின் போன் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி ஒலிக்க, அவர் ரொம்பவே அப்செட்டாகியுள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.