Aug 25, 2018 10:17 AM

‘சுய் தாகா’ படத்திற்காக தையல் வேலை கற்ற அனுஷ்கா ஷர்மா!

‘சுய் தாகா’ படத்திற்காக தையல் வேலை கற்ற அனுஷ்கா ஷர்மா!

இந்தியில் உருவாகி வரும் ‘சுய் தாகா’ படத்திற்காக நடிகை அனுஷ்கா ஷர்மா தையல் வேலையை கற்றுக்கொண்டிருக்கிறார்.

 

இப்படத்தில் தையல் பணி செய்யும் வருண் தவானின் மனைவியாக மம்தா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா ஷர்மா, இரண்டு மாதங்களாக தையல் வேலைபாட்டினை கற்றுக்கொண்டு படப்பிடிப்பில் கலந்துக் கொண்டாராம்.

 

இது குறித்து கூறிய அனுஷ்கா ஷர்மா, “இந்த ’சுய் தாகா’ படம் மிகவும் வித்யாசமான படம். இது போன்ற படங்களில் நடிக்க எனக்கு ஆர்வம் அதிகம் உள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி.” என்று தெரிவித்துள்ளார்.

 

யாரையும் சார்ந்து இருக்காமல் நம் உழைப்பால் முன்னேறலாம், என்ற கருத்தினை கொண்ட படமாக உருவாகும் இப்படம், மகாத்மா காந்தி அவர்களின் வழியை பின்பற்றும் வகையில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் நம் நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற செய்தியையும் தெரிவிக்கிறது.

 

இப்படத்தின் மூலம் முதல் முறையாக வருண் தவான் - அனுஷ்கா ஷர்மா ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டின் மிக எதிர்ப்பார்ப்பார்க்கப்படும் பட வரிசையில் இடம்பெற்றிருக்கும் இப்படத்தை சரத் கட்டாரியா இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

 

யார் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ‘சுய் தாகா - மேன் இன் இந்தியா’ படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.