Dec 10, 2019 11:01 AM

ஜெய் ஆகாஷின் பாட்டுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டு!

ஜெய் ஆகாஷின் பாட்டுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டு!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலான நடிகராக இருக்கும் ஜெய் ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சென்னை 2 பாங்காக்’. சதிஷ் சந்தோஷ் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யு.கே.முரளி இசையமைத்திருக்கிறார்.

 

இப்படத்தின் டிரைலரை பார்த்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஜெய் ஆகாஷ் உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டியதோடு, இப்படத்தில் இடம்பெறும் “அடங்காத காளை நீ...” என்ற பாடலை வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

 

முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

 

Jay Akash and AR Murugadoss