Nov 21, 2018 11:21 AM

’பிக் பாஸ்’ ஓவியா, இப்ப குட்டி நயந்தாரா! - ஏன் தெரியுமா?

’பிக் பாஸ்’ ஓவியா, இப்ப குட்டி நயந்தாரா! - ஏன் தெரியுமா?

பிக் பாஸ் மூலம் தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் பிரபலமான ஓவியா, சக போட்டியாளரான ஆரவை காதலித்து, பிறகு அந்த காதல் தோல்வியால் மன அழுத்தத்திற்கு ஆளாகி, அதன் மூலம் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டதை அனைவரும் அறிவர். போட்டியின் இறுதி வரை ஓவியா இருந்திருந்தால், அவர் தான் டைடில் வின்னர், என்பது அனைவரும் அறிந்தது தான் என்றாலும், அவர் காதலித்த ஆரவ் தான் போட்டியில் வெற்றி பெற்றதால், அது ஓவியா ஆர்மிக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

 

இதற்கிடையே, பிக் பாஸ் போட்டி முடிந்தாலும், ரசிகர்கள் ஓவியா மீது வைத்திருந்த அன்புக்கு மட்டும் முடிவில்லை என்பதை அறிந்துக் கொண்ட பல நிறுவனங்கள் அவரை தங்கள் நிறுவன விளம்பர படங்களில் நடிக்க வைத்தனர். மேலும் பல திரைப்பட வாய்ப்புகளும் ஓவியாவுக்கு கிடைத்ததால், காதல் தோல்வியால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்தவர், தற்போது சகஜமான நிலைக்கு திரும்பி, படங்கள், விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள் என்று பிஸியாக இருக்கிறார்.

 

இந்த நிலையில், ஓவியாவுக்கு மீண்டும் காதல் பீவர் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், ஆரவும் தற்போது ஒவியாவுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘ராஜபீமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் ஆரவ், ஓவியாவுடன் வெளியே சுற்றி வருவதாகவும், இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்பி போட்டோக்களும் வெளியாகி வருகிறது. 

 

இதைவிட முக்கியமானது, ஓவியா காதலர் ஆரவுக்காக தாரளமாக செலவு செய்து வருகிறாராம். இப்படி தான் நயந்தாராவும், தனது காதலருக்கு தாரளமாக செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது அவர் காதலிக்கும் விக்னேஷ் சிவனுக்கு சொகுசு கார், வீடு போன்றவற்றை பரிசாக வாங்கிக் கொடுத்திருக்கிறாராம்.

 

Oviya and Aarav Latest Photo

 

ஆனால், ஓவியா நயந்தாரா அளவுக்கு வீடு, கார் என்றெல்லாம் வாங்கிக் கொடுக்கவில்லை என்றாலும், சின்ன அளவில் ஆரவுக்காக சில செலவுகளை செய்து, குட்டி நயந்தாரா போல வலம் வருவதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.