Sep 30, 2018 04:30 AM

இன்று பிக் பாஸ் இறுதிச் சுற்று! - வெற்றியாளர் யார் தெரியுமா?

இன்று பிக் பாஸ் இறுதிச் சுற்று! - வெற்றியாளர் யார் தெரியுமா?

மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முதலிடம் பிடித்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசன் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? என்பது இன்று தெரிந்துவிடும்.

 

ஆம், இன்று இரவு 8 மணிக்கு பிக் பாஸ் சீசன் 2-வின் இறுதிச் சுற்று ஒளிபரப்பாக உள்ளது. இதில், பிக் பாஸ் சீசன் 2-வின் டைடில் வெற்றியாளரை பிக் பாஸ் அறிவிக்க உள்ளார்.

 

பல போட்டிகளையும், சவால்களையும் கடந்து தற்போது இறுதிக் களத்தில் இருக்கும் ரித்விகா, விஜயலக்‌ஷ்மி, ஐஸ்வர்யா தத்தா மற்றும் ஜனனி என இந்த நான்கு போட்டியாளர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளராக தேர்வாகப் போகிறார்கள் என்றாலும், அந்த ஒருவர் யார்? என்பதை அறிய மக்கள் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும், இந்த இறுதிச்  சுற்றுக்கு தேர்வான அனைத்து போட்டியாளர்களும் பெண்கள் என்பது இதன் சிறப்பம்சமாக உள்ளது.

 

Big Boss season 2 final

 

அதேபோல், இந்த இறுதிச் சுற்றுக்கு தேர்வான போட்டியாளர்களுக்கு பொதுமக்கள் ஓட்டு போடும் வசதியை ஏற்படுத்தியது, அதன் மூலம் இந்த நான்கு போட்டியாளர்களில் தங்களை கவர்ந்தவருக்கு மக்கள் பெரும் ஆர்வத்தோடு ஓட்டு போட்டனர். இப்படி மக்களின் ஓட்டுக்களை அதிகமாக பெற்றதில் ரித்விகா தான் முன்னியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் ரித்விகாவாக இருக்கலாம், என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

எது எப்படியோ இன்று இரவு 8 மணிக்கு, பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளர் யார்? என்பது தெரிந்துவிடப் போகிறது.