Sep 26, 2018 08:13 AM

பிக் பாஸை விட்டு வெளியேறிய யாஷிகாவுக்கு வந்த புது பிரச்சினை!

பிக் பாஸை விட்டு வெளியேறிய யாஷிகாவுக்கு வந்த புது பிரச்சினை!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2 இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது. வெற்றியாளர் யார்? என்பதை அறிய ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, கடந்த வாரம் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறிய யாஷிகா, தற்போதும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.

 

பிக் பாஸ் போட்டியில் இருந்து அவர் வெளியேறியதும், புது பிரச்சினையில் சிக்கியிருப்பதாக கூறுபவர், தன் உடல் மீது ஏதோ மைக் இருப்பது போலவே உணர்கிறாராம். அதேபோல், யாராவது ஆங்கிலத்தில் பேசினால், அவர்களுக்கு உடனே பதில் அளிக்க முடியாமல் அவர்களையே பார்த்துக் கொண்டு இருக்கிறாராம். ஏனெனில், பிக் பாஸ் வீட்டில் தமிழிலேயே பேசி பழகியவருக்கு, தற்போது ஆங்கிலம் மறந்துவிடுமோ, என்ற அச்சம் வந்துவிட்டதாம்.

 

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு தான் சந்தித்த பிரச்சினைகள் குறித்து, பிக் பாஸ் போட்டியில் யாஷிகா பகிர்ந்துக்கொள்ள போகிறார்.