Oct 03, 2018 07:51 AM

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பொருப்பில் பாபி சிம்ஹா!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பொருப்பில் பாபி சிம்ஹா!

ஸ்டுடியோ 18 என்ற நிறுவனம் ‘சீறும் புலிகள்’ என்ற தலைப்பில் படம் ஒன்றை தயாரிக்கிறது. வெங்கடேஷ் குமார்.ஜி என்பவர் எழுதி இயக்கும் இப்படம் விடுதலைப் புலிகள் பற்றிய திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்டப் பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

 

அதாவது, ‘சீறும் புலிகள்’ படத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் வேடத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

 

‘ஜிகர்தண்டா’ படத்திற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா, தொடர்ந்து வில்லன் மற்றும் ஹீரோ என்று பல படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது வேலுபிள்ளை பிரபாகரன் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.