பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் மரணம்!

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் இர்பான் கான், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 53.
1988 ஆம் ஆண்டு வெளியான ‘சலாம் பாம்பே’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இர்பான் கான், தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் மற்றும் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வந்தார். மேலும், ‘லைஃப் ஆஃப் பை’, ‘ஜுராசிக் வேர்ல்டு’ போன்ற ஆங்கிலப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இர்பான் கானுக்கு நேற்று இரவு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணம் பாலிவுட் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இர்பான் கானின் அம்மா சாயிதா பேகம் உயிரிழந்தார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற அவரது இறுதி சடங்கில் பங்கேற்க முடியாமல், போனிலேயே அம்மாவின் இறுதி சடங்கை பார்த்து இன்பான் பதான் அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.