Apr 30, 2020 08:37 AM

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் திடீர் மரணம்! - கொரோனா பாதிப்பா?

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் திடீர் மரணம்! - கொரோனா பாதிப்பா?

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் நேற்று மரணம் அடைந்தது இந்திய சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், இன்று மற்றொரு பிரபல இந்தி நடிகரான ரிஷி கபூர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பழம்பெரும் நடிகர் ராஜ் கபூரின் மகனான ரிஷி கபூர், தனது தந்தையின் இயக்கத்தில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். பிறகு 1973 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘பாபி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

 

இதற்கிடையே, புற்றுநோய் பாதிப்பால் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று குணமடைந்த ரிஷி கபூர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை திரும்பியவர், தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

 

இந்த நிலையில், வீட்டில் இருந்த ரிஷி கபூருக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிந்தார்.

 

கொரோனா வைரஸ் தொற்று மகராஷ்டிரா மாநிலத்தில் அதிகரித்து வருவதோடு, அறிகுறி இல்லாமலேயே பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதால், ரிஷி கபூரின் இந்த திடீர் மரணம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இருக்குமோ, என்று மக்கள் சந்தேகப்படுகிறார்கள். இதனால், பாலிவுட் நட்சத்திரங்கள் பெரும் பீதியடைந்திருக்கிறார்கள்.

 

இருப்பினும், ரிஷி கபூரின் மரணம் எதனால் நிகழ்ந்தது, என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.