Oct 02, 2018 12:08 PM
இயக்குநர் மணிரத்னத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! - போலீசார் விசாரணை

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான ‘செக்கச்சிவந்த வானம்’ வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்திருக்கும் இப்படம் பல இடங்களில் நல்ல வசூலையும் ஈட்டு வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு தொலை பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும், என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.