இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு விருது வழங்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளரான ஜிப்ரான், பாடல்களால் மட்டும் இன்றி தனது பின்னணி இசையாலும் பலதரப்பட்ட ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அதற்கு சான்றாக, சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ படத்தின் பின்னணி இசையை சொல்லலாம்.
தற்போது, விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’, ஹன்சிகாவின் ‘மகா’,’இம்சை அரசன் 24ம் புலிகேசி’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, ‘ஹவுஸ் ஓனர்’, கன்னடம் மற்றும் தமிழில் உருவாகும் ‘உள்துறை மந்திரி’ மாதவன் நடிக்கும் ஒரு படம், ஜீவா ஹீரோவாக நடிக்கும் படம் என்று பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்த நிலையில், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இசைக்கான ‘கான்புஃல்லென்ஸ் எக்ஸலன்ஸ்’ என்ற விருதை ஜிப்ரானுக்கு வழங்கி கவுரவிக்கிறது.
இது குறித்து கூறிய ஜிபரான், “சர்வ வல்லமையுள்ள கடவுள், இசையை உருவாக்குபவர், இசையமைக்க எனக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றி. இது போன்ற கௌரவத்தை பெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதே வேளையில், என் மீதும், என் இசையின் மீதும் அன்பு வைத்துள்ள ரசிகர்களுக்கு இன்னும் சிறப்பு செய்ய வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கிறது.” என்றார்.