Mar 24, 2021 03:21 AM

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியான பாடகி சின்மயி கணவர்!

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடியான பாடகி சின்மயி கணவர்!

மாபெரும் வெற்றி பெற்ற மலையாள திரைப்படமான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்குவதோடு, தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

 

ஒரு பெண் படித்து பட்டம் பெற்று தனது கனவுகளை எல்லாம் திருமணத்துக்கு பிறகு நனவாக்குகிறாளா? திருமணத்துக்கு பிறகு அவளது வாழ்க்கை எப்படியிருக்கிறது. கணவனும் புகுந்த வீட்டாரும் அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதே படத்தின் கதை.  

 

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் கதாப்பாத்திரத்தில், பிரபல பின்னணி பாடகி சின்மயின் கணவர் ரவி ராகுல் நடிக்கிறார். சமந்தாவின் ‘மாஸ்கோவின் காதலி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரவி ராகுல், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர், தெலுங்கு சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருகிறார். இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

 

Ravi Rahul

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. தொடர்ந்து காரைக்குடியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.