Dec 12, 2020 05:30 AM

அரசியல் பிரபலத்தால் பாதிக்கப்பட்ட சித்ரா! - பகீர் தகவலால் பரபரப்பு

அரசியல் பிரபலத்தால் பாதிக்கப்பட்ட சித்ரா! - பகீர் தகவலால் பரபரப்பு

தொலைக்காட்சி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா, கடந்த 9 ஆம் தேதி ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சித்ராவின் தற்கொலைக்கான காரணங்களாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

 

சித்ரா, தற்கொலை செய்துக் கொண்ட போது அவரது கணவர் ஹேமந்த் அவருடன் இருந்தார். அதே சமயம், சித்ராவின் தாய், சித்ராவை ஹேமந்த் தான் கொலை செய்துவிட்டதாக இறுதி அஞ்சலியில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இதையடுத்து, ஹேமந்திடம் போலீஸார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவரும் அவ்வபோது மாற்றி மாற்றி பேசி வருவதாக கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, சித்ராவின் பிரேத பரிசோதனை அடிப்படையில் அவரது மரணம் தற்கொலை தான், என்று அறிவித்த காவல்துறை,  சித்ராவின் அம்மா மற்றும் கணவர் கொடுத்த மன தொல்லைகளால் தான், அவர் தற்கொலை செய்துக் கொண்டார் என்றும் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த நிலையில், சித்ராவின் தற்கொலையில் புதிய திருப்பமாக அரசியல் பிரபலம் ஒருவரது பெயர் அடிபடுகிறது. அந்த அரசியல் பிரபலம் சித்ராவுக்கு தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது குறித்து மறைமுகமாக சித்ரா தரப்பில் முனுமுனுக்கப்பட்டு வந்தாலும், அந்த அரசியல் பிரபலம் யார், அவருக்கும் சித்ரா தற்கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா, இல்லையா உள்ளிட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.