’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா கணவருக்கு முத்தம் கொடுத்த டிடி! - வைரலாகும் புகைப்படம்

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் வலம் வரும் டிடி, தற்போது இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கிறார். ஆம், ‘முக்காதே பெண்ணே’ என்ற பாடலுக்கு கான்செப்ட் உருவாகி, அதனை அவர் இயக்கியு உள்ளார். இப்படாலை நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையே மகளிர் தினமான நேற்று தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி, 36 வயதுக்குப் பிறகு விவாகரத்து ஆனாலும் சரி, குழந்தை இல்லாமல் தனியாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருக்கிறேன், என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில், தனியார் மீடியா ஒன்று நடத்திய விருது விழாவில் சீரியல் நடிகருக்கு டிடி முத்தம் கொடுத்தது வைரலாகி வருகிறது. அந்த நடிகர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் தான்.
டிடி க்கு விருது வழங்கப்பட்ட அதே மேடையில், குமரனுக்கும் விருது வழங்கப்பட்டது. அதுவும் டிடி கையினாலே அந்த விருது வழங்கப்பட்டதோடு, விருது வழங்கியதோடு, குமரன் கண்ணத்தில் ஆசையாக முத்தம் ஒன்றையும் டிடி வழங்க, மேடையே அதிர்ந்து போனது.
தற்போது வைரலாகி வரும் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா கணவருடன் விவகாரத்தான டிடி நெருக்கம், உள்ளிட்ட ஏகப்பட்ட கமெண்ட்கள் வந்தாலும், அந்த புகைப்படத்தை பலர் லைக் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,