‘தாதா 87’ தயாரிப்பாளரின் அடுத்தப் படம் ‘சூப்பர் ஸ்டார் - மீத்திரன் முக்கிளை’

அறிமுக இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தாதா 87’. கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி, சரோஜா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜனகராஜ், ஆனந்த் பாண்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தை தயாரித்திருக்கும் கலை சினிமாஸ் நிறுவனம், தனது அடுத்தப் படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘சூப்பர் ஸ்டார் - மீத்திரன் முக்கிளை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.