தனுஷை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் தயாரிக்கும் பிரபல தயாரிப்பாளர்!

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வட சென்னை’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இப்படத்தின் கதாபாத்திரங்கலும் அதில் நடித்திருப்பவர்களும் தான். சமீபத்தில் வெளியான டிரைலரும் பெரிய அளவில் ரீச் ஆகியிருக்கும் நிலையில், படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
அதே சமையம், கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ எப்போது ரிலீஸ் ஆகும் என்பது அப்படக்குழுவினருக்கே தெரியாது ஒன்றாக இருக்கிறது. இதனால், அப்படத்தின் மீது தனக்கு இருந்து கவனத்தை திசை திருப்பியிருக்கும் தனுஷ் தொடர்ந்து பல படங்களில் நடிக்க இருக்கிறார்.
‘வட சென்னை’ படத்திற்கு பிறகு கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மட்டும் தொடர்ந்து 3 படங்களில் தனுஷ் நடிக்க இருக்கிறாராம். அதில் ஒரு படத்தை ‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கப் போகிறார்.
தாணு என்றாலே பிரம்மாண்ட தயாரிப்பாளர் என்ற பெயர் இருப்பதோடு, படங்களுக்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களிடம் கொண்டு செல்வதில் தாணு வல்லவர் என்பதால், தனுஷ் அவரது தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படங்கள் நடிக்க சம்மதித்தாராம்.