Aug 18, 2025 04:38 PM

தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ’தண்டகாரண்யம்’ செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது

தினேஷ் - கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ’தண்டகாரண்யம்’ செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியாகிறது

இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில்  தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர்,  பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’. இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் , லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

’வாழை’ படத்திற்குப் பிறகு கலையரசன் நடித்திருக்கும் படம் என்பதாலும், ‘லப்பர் பந்து’ வெற்றிக்குப் பிறகு தினேஷ் நடிப்பில் வெளியாகும் படம் என்பதாலும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.