Nov 26, 2018 05:47 AM

இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி மரணம்!

இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி மரணம்!

பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தரின் மனைவி, ராஜம் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

 

கடந்த சில நாட்களாக உடல் நல குறைவுடன் இருந்த ராஜம் பாலச்சந்தர், இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார்.

 

அவரது உடலுக்கு திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்று மாலை 3 மணிக்கு மேல் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

 

இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர்.