Jan 03, 2019 05:35 AM
இளம் ஹீரோவுக்கு வில்லனான இயக்குநர் பாரதிராஜா!

இயக்கம், நடிப்பு, சினிமா பள்ளி என்று பிஸியாக இருக்கும் பாரதிராஜா, ’ராக்கி’ என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
‘தரமணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு வில்லனாக பாரதிராஜா நடிக்கிறார். ஆர்.ஏ.ஸ்டுடியோஸ் சார்பில் சி.ஆர்.மனோஜ் குமார் தயாரிக்கும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
தர்புகா சிவா இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து, கபேர் வாசுகி ஆகியோர் பாடல்கள் எழுத, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் படத்தொகுப்பு செய்கிறார். ராமு கலையை நிர்மாணிக்க, தினேஷ் சுப்பராயன் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.