May 01, 2020 04:39 PM

அஜித்துக்கு வருத்தத்துடன் வாழ்த்து கூறிய சேரன்! - இது தான் காரணமா?

அஜித்துக்கு வருத்தத்துடன் வாழ்த்து கூறிய சேரன்! - இது தான் காரணமா?

இன்று (மே 1) 49 வது பிறந்தநாள் காணும் நடிகர் அஜித்துக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு அஜித் வேண்டுகோள் வைத்த நிலையிலும், அவரது ரசிகர்கள் சில பகுதிகளில் அஜித்தின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள்.

 

மேலும், திரை பிரபலங்கள் பலர் இணைய வழியாக அஜித்துக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகரும் இயக்குநருமான சேரனும், தனது ட்விட்டர் பக்கம் மூலம் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

ஆனால், அவரது வாழ்த்தி தெரிவித்திருப்பதில் சிறு வருத்தமும் காணப்படுகிறது. அதாவது, அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்த சேரன், “இன்று அஜித் அவர்களுக்கு பிறந்த நாள். முயற்சி, உழைப்பு இரண்டுமே அவரை இன்று உயரத்தில் வைத்திருக்கிறது.

 

அவருக்கு நான் சொல்லும் இந்த பிறந்தநாள் வாழ்த்து போய் சேரவாய்ப்பில்லை.. எனவே அவரை உச்சத்தில் வைத்து அழகு பார்க்கும் அவரின் ரசிகர்களுக்கு சொல்லி விடுவோம் #HBDDearestThaIaAJITH” என்று பதிவிட்டுள்ளார்.

 

அஜித்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்து போய்ச் சேர வாய்ப்பில்லை, என்று சேரன் குறிப்பிட்டிருப்பதை பார்த்தால், அவர் அஜித்தை சந்திக்கவோ அல்லது தகவல் ஒன்றை அவரிடம் தெரியப்படுத்தவோ முயற்சித்து அதில் கசப்பான அனுபவத்தை சந்தித்திருப்பார், என்று தெரிகிறது.