Mar 10, 2021 05:45 AM

அட்ரஸ் கொடுத்த இயக்குநரை அலக்கழித்த ’சூரரைப் போற்று’ நாயகி!

அட்ரஸ் கொடுத்த இயக்குநரை அலக்கழித்த ’சூரரைப் போற்று’ நாயகி!

அறிமுக இயக்குநர் ராசு ரஞ்சித் எழுதி இயக்கியுள்ள படம் ‘தீதும் நன்றும்’. ராசு ரஞ்சித், ஈசன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, சந்தீப் ராஜ் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, லிஜிமோல் ஜோஸ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

 

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் கதாநாயகியாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கும், இயக்குநர் சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் கதாநாயகியாக நடித்த லிஜிமோல் ஜோஸுக்கும் ‘தீதும் நன்றும்’ படம் தான் அறிமுகப் படம். ஆனால், இப்படம் வெளியாவதற்கு முன்பு ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் வெளியாகிவிட்டது.

 

இந்த நிலையில், மார்ச் 12 ஆம் தேதி வெளியாக உள்ள ‘தீதும் நன்றும்’ படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழு, கதாநாயகிகளை அழைத்த போது, தாங்கள் பெரிய நடிகைகளாகி விட்டோம், என்று கூறி வர மறுத்து விட்டார்களாம்.

 

தமிழ் சினிமாவில் வாய்ப்புக்காக அலைந்துக் கொண்டிருந்த அபர்ணா பாலமுரளி மற்றும் லிஜிமோல் ஜோஸ் ஆகியோரை தனது படத்தில் அறிமுகப்படுத்தி அட்ரஸ் கொடுத்த இயக்குநர் ராசு ரஞ்சித், நடிகைகளின் அலக்கழிப்பால் அப்செட்டாகியுள்ளார்.

 

Theethum Nandrum

 

இது குறித்து கூறிய இயக்குநர் ராசு ரஞ்சித், “படம் எடுக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், ரிலீஸ் என்று வந்த போது பல போராட்டங்களை சந்தித்தோம். அனைத்தையும் கடந்து இப்போது படம் ரிலீஸ் ஆனாலும் அதை நினைத்து சந்தோஷப்பட முடியாதபடி இருக்கமான மன நிலையில் தான் இருக்கிறோம். அந்த அளவுக்கு நொந்து போயிருக்கிறோம். இந்த படத்தில் ஒப்பந்தம் ஆகும் போது, பாலமுரளி அபர்ணாவும், லிஜிமோல் ஜோஸும் புதுமுகங்களாக இருந்தார்கள். இப்போது பெரிய நடிகைகளாகி விட்டதாக சொல்லு பட புரோமோஷனுக்கு வர மறுத்துவிட்டார்கள். இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும், படத்தை பார்த்தவர்கள் பாராட்டிப் பேசுவது எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.” என்றார்.