திமுக குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பரபரப்பு கருத்து!

தமிழ் சினிமாவில் உள்ள சில பிரபலங்களை தமிழக அரசியல் தலைவர்களும், அரசியல் வல்லுநகர்கள் உற்றுநோக்கி வருகிறார்கள். அவர்களின் முக்கியமானவராக கருதப்படுபவர் இயக்குநர் பா.ரஞ்சித்.
’கபாலி’, ‘காலா’ என ரஜினிகாந்தை வைத்து தொடர்ந்து இரண்டு படங்களை இயக்கிய பா.ரஞ்சித், சினிமா மீது மட்டும் அல்லாமல் அரசியல் மீது பெரும் ஆர்வம் கொண்டவர். இவருடன் ரஜினிகாந்த் பழகிய பிறகே அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், குஜராத்தில் பா.ஜ.க-வை கதறவிட்டதோடு, அம்மாநில சட்டசபை தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜிக்னேஷ் மேவானியுடனான நட்பு மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல காந்தியுடனான சந்திப்பு என்று தனது அடுத்தடுத்த நடவடிக்கை மூலம் சினிமாவில் மட்டும் இன்றி தமிழக அரசியலிலும் இயக்குநர் பா.ரஞ்சித் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், அரசியலில் திமுக-வுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதை மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்ல வேண்டும், என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய ரஞ்சித், “தனக்கு பிடித்த அரசியல் தலைவர் கருணாநிதி என ரஜினிகாந்த் என்னிடம் பலமுறை கூறியுள்ளார். அரசியலில் திமுக-வுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதைமு.க.ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.