Dec 02, 2018 10:28 AM

நயந்தாராவுக்கு டிரைவரான இயக்குநர்!

நயந்தாராவுக்கு டிரைவரான இயக்குநர்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயந்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் அவருக்கு என்று தனி மார்க்கெட் உருவாகியிருப்பதால், அவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் கியூவில் நிற்கிறார்கள்.

 

தற்போது, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுடன், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நயந்தாரா நடிக்க தொடங்கியுள்ளார்.  அதன்படி அஜித்தின் ‘விஸ்வாசம்’ கமலின் ‘இந்தியன் 2’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜயின் புதுப்படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். அதே சமயம், சம்பளமாக ரூ.6 கோடி வரை நயந்தாரா கேட்பதாகவும், அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால், அவர் கேட்கும் தொகையை தயாரிப்பாளர்கள் தாரளமாக கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், நயந்தாரா விலையுர்ந்த ஜாக்குவார் கார் ஒன்றை புதிதாக வாங்கியுள்ளாராம். ஏற்கனவே பி.எம்.டபுள்யூ கார் வைத்திருக்கும் நயந்தாரா, சென்னையில் படப்பிடிப்பு என்றால் ஜாக்குவாரிலும், வெளியூரில் படப்பிடிப்பு என்றால் பி.எம்.டபிள்யூ காரிலும் பயணிக்கிறாராம். 

 

அதேபோல், அவருக்கு கார் டிரைவராக அவரது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தான் இருக்கிறாராம். நயந்தாரா வெளியூர் படப்பிடிப்புக்கு சென்றால் கார் ஓட்டிச் செல்லும் விக்னேஷ் சிவன், நயந்தாராவுக்காக கதை கேட்பதில் தொடங்கி மற்ற பலவற்றிலும் ஈடுபாடு காட்டுபவர், நயந்தாராவை ரொம்பவே பொருப்பா பார்த்துக் கொள்கிறாராம்.

 

Director Vignesh Shivan

 

என்னதான் அவர் நயந்தாராவை பொருப்பாக பார்த்துக்கொண்டாலும், எப்போ அவரை பொண்டாட்டியாக்கிக் கொள்ளப் போகிறார்?, என்பதே நயன் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.