Nov 23, 2018 04:26 AM

முத்தத்தில் கமல் ஆன விமல்! - ’இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ நிகழ்ச்சியில் கலகலப்பு

முத்தத்தில் கமல் ஆன விமல்! - ’இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ நிகழ்ச்சியில் கலகலப்பு

பிரபல கன்னட ந் அடிகை ஷர்மிளா மான்ரே தனது சார் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘குண்டூர் டாக்கீஸ்’ படத்தின் ரீமேக்கான இப்படத்தில் விமல் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். இவர்களுடன் பூர்ணா, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், கே.ராஜன், சிங்கம்புலி உளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

ஏ.ஆர்.முகேஷ் இயக்கும் இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்க, விவேகா பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. 

 

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “முத்தத்தில் விமன் இனி கமல் ஆவார். முத்தத்தில் மட்டும் தான். மற்ற விஷயங்களில் வேண்டாம். விமலுக்கு எங்கேயோ மச்சம் இருக்கிறது. இந்த படத்தின் மூலம் அவர் உச்சம் தொடர் வேண்டும். இருட்டு அறையில் முரட்டு குத்து என்றெல்லாம் படம் எடுக்கிறார்கள். அதைவிட இது நிச்சயம் நல்ல படமாக இருக்கும். படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

 

நடிகர் மன்சூரலிகான் பேசும்போது “கஜா புயலால் பாதிக்கப்பட்ட கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் மூன்று நாட்களாக பணியில் ஈடுபட்டிருந்தேன். இன்னும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இந்த நிலைமை மாற ஆட்சி மாற்றம் வரவேண்டும். இந்த படத்தின் போஸ்டரை பார்த்தாலே தியேட்டருக்கு கூட்டம் வந்து விடும். நிச்சயம் படம் பெரிய வெற்றி பெறும்” என்றார்.

 

படத்தின் நாயகன் விமல் பேசும்போது, “இந்த படத்தில் நடிப்பதற்கு கதாநாயகி கிடைப்பாரா என்று கேட்டேன். கதாநாயகி ஆஷ்னா ஓகே சொல்லிவிட்டார் என்று சொன்னார்கள். அப்புறம் தான் நானும் சரி என்று சொன்னேன். இது ரசிகர்களுக்கு ஜாலியான பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என்றார்.

 

படத்தின் தயாரிப்பாளரான நடிகை  ஷர்மிளா  பேசும்போது “இயக்குனர் முகேஷ் என்னிடம் சொல்லியது போல திட்டமிட்டு 40 நாட்களில் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டார். படப்பிடிப்பு லண்டனிலும் சென்னையிலும் நடைபெற்றது. இது முழுக்க முழுக்க ஜாலியான கிளாமர் படம்.” என்று குறிப்பிட்டார். 

 

நடிகை பூர்ணா, சிங்கம் புலி, ஸ்னிக்தா, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீசன்,  இசையமைப்பாளர் சங்கர் நடராஜன் ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.