கல்லூரி மாணவியுடன் காதல்! - மனைவி, குழந்தைகளை விட்டுட்டு நடிகர் எஸ்கேப்

கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட காதலால், மனைவி மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு நடிகர் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சிவா. இவர் ‘பயபுள்ள’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். பல ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருக்கும் இப்படத்தை தொடர்ந்து சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் சிவாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. குடும்பத்தை செஞ்சியில் விட்டுவிட்டு சென்னையில் வாடாகை வீட்டில் இருந்தபடி சினிமா வாய்ப்புகளை தேடி சிவா அலைந்திருக்கிறார்.
அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பொறியியல் மாணவியுடன் சிவாவுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவரிடம் தான் பெரிய நடிகர் என்று கூறியுள்ள சிவா, சினிமா பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அந்த பெண்ணிடம் காட்ட அவரும் நம்பியிருக்கிறார். இதற்கிடையே, இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்ததும், தான் தனது மனைவியை பிரிந்து வாழ்வதாக சிவா, மாணவியிடம் கூற மாணவிக்கு சிவா மீது இறக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.
இவர்களது நடவடிக்கைகளை பார்த்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டித்த நிலையில், சிவா மாணாவியுடன் ஓட்டம் பிடித்திருக்கிறார். உடனே மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததன் பேரில், சிவா குறித்து விசாரிக்கையில், அவர் மனைவியை பிரியவில்லை என்ற உண்மை தெரிய வந்துள்ளது.
தற்போது மாணவியுடன் தலைமறைவாக இருக்கும் சிவாவை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.