Nov 01, 2018 01:37 AM

பிரபல நடிகரின் இரண்டாவது மனைவிக்கு அடி உதை - முதல் மனைவி தலைமறைவு

பிரபல நடிகரின் இரண்டாவது மனைவிக்கு அடி உதை - முதல் மனைவி தலைமறைவு

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் துனியா விஜய். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி நாகரத்னா தனது பிள்ளைகள் மோனிகா, மோனிஷா, சாம்ராட் ஆகியோருடன் தனியாக வசித்து வர, துனியா விஜய் இரண்டாவது மனைவி கீர்த்தி கவுடாவுடன் வசித்து வருகிறார்.

 

இதற்கிடையே, ஜிம் டிரெய்னரை தாக்கிய வழக்கில் கடந்த மாதம் துனியா விஜய் கைது செய்யப்பட்டார். இந்த கைதுக்கு கீர்த்தி தான் காரணம், என்று கூறி அவரை நாகரத்னா தாக்கியுள்ளார். கீர்த்தியின் வீட்டுக்கு சென்ற நாகரத்னா, தனது செருப்பால் அவரை தாக்கியுள்ளார்.

 

நாகரத்னா கீர்த்தியை தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோவை பார்த்த போலீசார் தானாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். 

 

இது குறித்து நாகரத்னாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது வீட்டுக்கு சென்ற போது, போலீஸ்  வருவதை பார்த்த நாகரத்னாவின் மகள் கதவை திறக்காமல் இருந்துள்ளார். அந்த நேரத்தில் நாகரத்னா வீட்டை விட்டு வெளியேறியவர் தற்போது வரை தலைமறைவாக இருக்கிறாராம்.