Sep 26, 2018 07:24 AM

நித்யானந்தாவின் சீடராகிய பிரபல இளம் நடிகை! - வைரலாகும் வீடியோ

நித்யானந்தாவின் சீடராகிய பிரபல இளம் நடிகை! - வைரலாகும் வீடியோ

நித்யானந்தாவின் சீடராக பல பெண்கள் இருக்க, நடிகை ரஞ்சிதா அவருடன் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தார் என்பதை உலகமே அறியும். ரஞ்சிதாவை தொடர்ந்து நடிகை கெளசல்யாவும் நித்யானந்தாவின் சீடராக இருக்கிறார் என்று தகவல் பரவியது.

 

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள பிரியா பவானி சங்கரும் நித்யானந்தாவின் சீடராகியுள்ளார்.

 

டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தவர், தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

 

இந்த நிலையில், பிரியா பவானி சங்கர் நித்யானந்தாவை கிண்டல் செய்து வெளியிட்டிருக்கும் டப்மேஷ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Priya Bhavani Shankar

 

அந்த வீடியோவில், நித்யானந்தா பேசும் பிரபல வசனத்தை பிரியா பவானி சங்கர் பேசி நடித்திருக்கிறார். “இந்த பிரபஞ்சத்திற்கே என்னை பின்பற்றுவதை தவிர வேறு எந்த வழியும் கிடையாது. நான் எதற்காக வந்துள்ளேன் என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு (செய்கை காண்பிக்கிறார்). இந்த பிரபஞ்சம் என்னை பின்பற்றியே ஆக வேண்டும்.” என்ற வசனத்தை ஆங்கிலத்தில் பேசி பிரியா பவானி சங்கர் நடித்திருப்பதற்கு ரசிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.

 

சில ரசிகர்களோ, “பாத்து..நித்யானந்தாவின் சீடராக மாறிவிடப் போகிறீர்கள்” என்று கமெண்டும் செய்துள்ளார்கள்.

 

வீடியோவை காண இங்கே க்ளீக் செய்யவும்