Jan 04, 2019 05:26 AM

பிரபல நடிகை கொலை! - கைதாகும் கணவர்

பிரபல நடிகை கொலை! - கைதாகும் கணவர்

பிரபல நடிகை சிம்ரன் சிங் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஆற்று பாலத்தின் கீழ் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஓடியா ஆல்பம் நடிகையான சிம்ரன் சிங்,  பல சம்பல்பூர் ஆல்பம் பாடல்களில் நடித்திருப்பதொடு, சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். மக்களிடம் பிரபலமாக இருக்கும் இவரது உடல் நேற்று மகாநதி ஆற்றின் குறுக்கே கோய்ரா மாத்தா என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் அடியில் கிடந்துள்ளது.

 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவரது முகம் மற்றும் தலையில் அதிகமான காயங்கள் இருந்தது.

 

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவரை கொலை செய்தது யார், என்ன காரணம் என போலீசார் துப்பறிந்து வருகின்றனர்.

 

Simran  Singh

 

நடிகையின் குடும்பத்தினர் அவரின் கணவர் தான் கொலை செய்துள்ளார் என புகார் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள இருக்கும் நிலையில், அவர் தான் கொலையாளி என்று சிம்ரனின் குடும்பத்தார் தொடர்ந்து கூறிவருவதால், அவரை போலீசார் கைது செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.