Nov 30, 2018 08:13 AM
பிரபல ஒளிப்பதிவாளர் ராபர்ட் மரணம்!

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராபர்ட் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68.
மாபெரும் வெற்றி பெற்ற ‘ஒரு தலை ராகம்’, ‘சின்னப்பூவே மெல்ல பேசு, ‘குடிசை’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள ராபர்ட், இயக்குநர் ராஜசேகருடன் இணைந்து ராபர்ட் - ராஜசேகர் என்ற பெயரில் சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார்.
மேலும், பல ஆண்டுகளாக சென்னை திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு துறை பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இந்த நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராபர்ட், இன்று காலை 10 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.