Sep 26, 2018 08:39 AM

கீர்த்தி சுரேஷுக்கு மேனஜரான பிரபல இயக்குநர்!

கீர்த்தி சுரேஷுக்கு மேனஜரான பிரபல இயக்குநர்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களின் பட்டியலில் இடம் பிடித்ததோடு, நடிக்க தெரிந்த நடிகை என்றும் பெயர் எடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஏகப்பட்ட வாய்ப்புகள் வருவதோடு, முன்னணி ஹீரோக்களின் பேவரைட் ஹீரோயினாகவும் கீர்த்தி சுரேஷ் மாறியிருக்கிறார்.

 

விஜய், விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு, பிரபல இயக்குநர் ஒருவர் மேனஜர் ரேஞ்சிக்கு அவரது புகழ் பாடி வருகிறார். இதை அந்த இயக்குநரே கூறியது தான் ஹைலைட்டே.

 

அந்த இயக்குநர் வேறு யாருமல்ல, லிங்குசாமி தான். சமீபத்தில் நடைபெற்ற ‘சண்டக்கோழி 2’ படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பாக, பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று அனைவரையும் பாராட்டி பேசியவர், கீர்த்தி சுரேஷை மட்டும் கொஞ்சம் அதிகமாகவே பாராட்டி பேசினார்.

 

Director Lingusamy

 

‘நடிகையர் திலகம்’ படத்திற்குப் பிறகு நான் கீர்த்தி சுரேஷுடன் பணியாற்றியதாக நினைக்கவில்லை, ஏதோ சாவித்ரியுடன் பணியாற்றியதாகவே நினைத்தேன். அவரது நடிப்பை பார்த்து வியந்துடன், அவர் நடிப்பு திறமை பற்றி பலரிடம் பேசியதோடு, அவர் குறித்து என்னிடம் பாராட்டி பேசியவர்களின் விபரத்தையும், அவர்கள் எப்படி பாராட்டினார்கள் என்பதையும் கீர்த்தி சுரேஷிடம் அடிக்கடி சொல்லுவேன். ஒரு கட்டத்தில் நான், கீர்த்தி சுரேஷுக்கு மேனஜர் போலவே மாறிவிட்டேன், என்று இயக்குநர் லிங்குசாமி பேசினார்.

 

இப்படி கீர்த்தி சுரேஷை பாராட்டி பேசிய இயக்குநர் லிங்குசாமி, தான் இயக்கப் போகும் இன்னும் மூன்று படங்களில் கீர்த்தி சுரேஷை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க போவதாகவும் தெரிவித்தார்.