Oct 02, 2018 06:10 AM
குடும்பத்தோடு விபத்தில் சிக்கி பிரபல இசையமைப்பாளர் மரணம்! - சோகத்தில் திரையுலகம்

17 வயதில் இசையமைப்பாளரானவர் பாலா பாஸ்கர். மலையாள சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்த இவர், குடும்பத்தோடு விபத்தில் சிக்கி மரணம் அடைந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது மனைவி மற்றும் மகளுடன் கடந்த வாரம் கோவிலு சென்ற பாலா பாஸ்கர், திரும்ப வீட்டுக்கு வரும் போது வழியில் சிக்கியுள்ளார்.
இந்த விபத்தில், பாலா பாஸ்கரின் மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அவரும், அவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று பாலா பாஸ்கர் சிகிச்சை பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.
இசையமைப்பாளர் பாலா பாஸ்கரின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.