Nov 24, 2018 10:16 AM
’பேட்ட’ படத்தை கைப்பற்றிய முன்னணி தயாரிப்பாளர்! - அதிரப் போகும் புரோமோஷன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்னணி வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் 9 ஆம் தேதி ‘பேட்ட’ படத்தின் ஆடியோ வெளியாக இருக்கும் நிலையில், படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் ‘பேட்ட’ படத்தை கலைப்புலி எஸ்.தாணுவிடம் கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை தயாரித்து முடித்துவிட்ட சன் பிக்சர்ஸ், வெளியீட்டு உரிமையை தாணுவிடம் வழங்கிவிட்டதாம்.
ஏற்கனவே ரஜினியின் ‘கபாலி’ படத்தை தனது விளம்பர யுக்தியால் மிகப்பெரிய இடத்திற்கு எடுத்துச் சென்றவர் தாணு, என்பதால், ‘பேட்ட’ படத்தின் விளம்பரமும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.